[ad_1] XDefiant விளையாட்டை எப்படி விளையாணும் தெரியுமா?

May 29, 2024

XDefiant விளையாட்டை எப்படி விளையாணும் தெரியுமா?

mukesh M

XDefiant!

XDefiant விளையாட்டு ஆனது முதல் நபர் சூட்டர் விளையாட்டு ஆகும். Ubisoft நிறுவனம் வெளியிட்ட இந்த விளையாட்டை எப்படி விளையாடுவது? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: facebook-com

உதவிக்குறிப்புகளை பயன்படுத்துங்கள்!

XDefiant விளையாட்டின் மேம்பட்ட யுக்திகளை புரிந்துக்கொள்ள விளையாட்டிற்கு இடையில் திரையில் தெரியும் உதவிக்குறிப்புகளை தவறாமல் பின் தொடருங்கள்!

Image Source: facebook-com

வரைபடத்தை கவனியுங்கள்!

திரையில் காண்பிக்கப்படும் வரைபடம் (map) ஆனது எதிரிகளை அடையாளம் காணவும், உங்கள் இலக்கை நோக்கி பயணிக்கவும் உதவியாக உள்ளது. எனவே, இந்த வரைபடத்தை தவறாது கண்காணிப்பது நல்லது!

Image Source: facebook-com

விளையாட்டின் முறையை கற்கவும்!

XDefiant விளையாட்டை முழுமையாக புரிந்துக்கொள்ள விளையாட்டின் முறைகள் மற்றும் நிலைகளை புரிந்துக்கொள்வது அவசியம். குறிப்பிட்ட ஒவ்வொரு நிலையின் செயல்பாடு திறன்களை அறிவது, சிறப்பான வியூகத்தை அமைக்க உதவியாக இருக்கும்!

Image Source: facebook-com

குழுவாக செயல்படுங்கள்!

குழு உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுவது, விளையாட்டின் நிலைகளில் முன்னேற்றம் காண உதவியாக இருக்கும். எனவே, தனித்து செயல்படுவதை காட்டிலும், குழுவாக செயல்பாடுவது நல்லது!

Image Source: facebook-com

இலக்கில் கவனம் செலுத்துங்கள்!

எதிரிகளை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விளையாடுவதை தவரித்து, இலக்கை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் விளையாட துவங்குங்கள். இந்த யுக்தியானது உங்கள் வெற்றியை உறுதி செய்ய உதவியாக இருக்கும்.

Image Source: facebook-com

திறன், பாத்திர தேர்வுக்கு முன்னுரிமை!

விளையாட்டில் காணப்படும் ஒவ்வொரு பங்கேற்பாளருக்கும் (பாத்திரங்களுக்கும்) தனித்திறன் உண்டு என்பதால், உங்கள் பாத்திரத்தை திறன் அறிந்து சரியான ஒன்றை தேர்வு செய்வது அவசியம்!

Image Source: facebook-com

ஆயுதங்களில் கவனம் செலுத்துங்கள்!

விளையாட்டில் உங்களை தற்காத்துக்கொள்ளவும், எதிரிகளை எதிர்த்து போராடவும் ஆயுதங்கள் அவசியமான ஒன்றாக இருக்கும் நிலையில், சக்திவாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்த முயற்சியுங்கள்!

Image Source: facebook-com

இயக்கத்தை உறுதி செய்யுங்கள்!

விளையாட்டில் ஒரு இடத்தில் நிற்பது எதிரிகளின் துப்பாக்கி குண்டுகளுக்கு உங்களை பலியாக்கும். எனவே, இயங்கிக்கொண்டே இருங்கள். தொடர்ச்சியான இயக்கம் ஆட்டத்தில் உங்கள் இருப்பை உறுதி செய்யும்!

Image Source: facebook-com

Thanks For Reading!

Next: PlayStation 5-ல் விளையாடுவதற்கு ஏற்ற அசத்தல் Horror Games!

[ad_2]